×

திருத்தணியில் சூறாவளி காற்றால் 60 மின்கம்பங்கள் சேதம்: சீரமைத்த மின்வாரிய ஊழியர்கள்

திருத்தணி: திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், சிறுவர், சிறுமியர், முதியவர் என, அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திடீரென, இப்பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை மற்றும் ஐஸ் கட்டி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் திருத்தணி தாலுகாவில் உள்ள பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி நகரம்-1 மற்றும் நகரம்- 2 உள்பட பல்வேறு பகுதிகளில்,60க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வயல்வெளி மற்றும் மரங்கள் மீது சாய்ந்தது.

சில இடங்களில் மின்வயர்கள் அறுந்து வயல்வெளியில் விழுந்துள்ளன. எனவே, இதனால், பல கிராமங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர்கள் ராஜேந்திரன், கோடீஸ்வரி, உதவி பொறியாளர்கள் வேண்டாமிர்தம், தமிழரசன், கேசவன், புஷ்பராஜ் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை, மின்வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு, சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்தனர். இதன்காரணமாக, துண்டிக்கப்பட்ட மின்வினியோகம் சீரானது

The post திருத்தணியில் சூறாவளி காற்றால் 60 மின்கம்பங்கள் சேதம்: சீரமைத்த மின்வாரிய ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Tiritani ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...